செய்திகள்

மோடியை புகழ்ந்த கேரள காங்கிரஸ் தலைவர்

Published On 2019-05-29 03:30 IST   |   Update On 2019-05-29 03:30:00 IST
பிரதமர் நரேந்திர மோடியை கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அப்துல்லா குட்டி. இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து எழுதி உள்ளார்.

அதில், “மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, அவருடைய வழியில் ஆட்சி நடத்தி வருவதால் தான் நரேந்திர மோடியால் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. மோடியின் தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம் போன்றவை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, மோடியின் வளர்ச்சி திட்டங்களால் கிடைத்தது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யாக இருந்த போது குஜராத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்களை புகழ்ந்ததால் அக்கட்சியில் இருந்து 2009-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர் எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News