செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீதான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்

Published On 2019-05-07 10:31 GMT   |   Update On 2019-05-07 10:31 GMT
டெல்லியில் முன்னாள் சட்ட மந்திரியாகவும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகருமான சோம்நாத் பாரதி மீது தொடரப்பட்ட வழக்கை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AAP #SomnathBharti
புது டெல்லி:

ஆம் ஆத்மியின் மால்வியா நகர் தொகுதி எம் எல் ஏவும், முன்னாள் சட்ட மந்திரியுமான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா பாரதி வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, கொலை முயற்சி ஆகிய புகார்களை கொடுத்தார்.

இதையடுத்து சோம்நாத் பாரதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிறிது காலம் தலைமறைவானார். அதன்பின்னர் இடைக்கால நிவாரணம் அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .

இதனை விசாரித்த நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு கூறுகையில், 'சோம்நாத்தின் இந்த இடைக்கால நிவாரண மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவரது குழந்தைகள் நலன் கருதி இந்த பிரச்சனைக்கு நல்ல முடிவு விரைவில் எடுக்க வேண்டும். சோம்நாத் ஒரு பொறுப்பான குடிமகன் என்பதை உணர்ந்து உடனே சரணடைய வேண்டும்' என கூறியது. இதையடுத்து சோம்நாத் சரணடைந்தார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சமீபத்தில் சோம்நாத்தின் மனைவி லிபிகா, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், கணவர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர சேகர், சோம்நாத் மீதான புகாரை தள்ளுபடி செய்தார்.  #AAP #SomnathBharti
Tags:    

Similar News