செய்திகள்

6, 7-வது கட்ட தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி 6 கூட்டங்களில் பேசுகிறார்

Published On 2019-05-07 11:26 IST   |   Update On 2019-05-07 11:26:00 IST
பாராளுமன்றத்துக்கு 6 மற்றும் 7 வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி 6 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு நடைபெற்று வருகிறது. #Loksabhaelections2019 #BJP #NarendraModi
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு வருகிற 12-ந்தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

அதுபோல வருகிற 19-ந்தேதி 59 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இரு கட்ட தேர்தலுக்காக 118 தொகுதிகளில் தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இந்த 118 தொகுதிகளில் கணிசமான இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று வியூகம் அமைத்துள்ளனர்.

அதற்காக அவர்கள் இருவரும் இந்த 118 தொகுதிகளில் கூடுதல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி பா.ஜனதா தலைவர் அமித்ஷா 11 கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக 5 பேரணிகளை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 6 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு நடந்து வருகிறது. இது தவிர 10-க்கும் மேற்பட்ட சிறிய கூட்டங்களிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.


மோடி-அமித்ஷா இருவரும் ஏற்கனவே திட்டமிட்டதை விட கூடுதலாக பல இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளனர். அமித்ஷா இதுவரை 290 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளார்.

பிரசாரம் செய்ய கடைசி நாளான 17-ந்தேதிக்குள் மேலும் 10 இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். மோடியும் இதே அளவுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காங்கிரஸ் தலைவர்களும் கூடுதல் இடங்களில் பேசுவதற்கு முடிவு செய்துள்ளனர். #Loksabhaelections2019 #BJP #NarendraModi

Similar News