செய்திகள்

டெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்

Published On 2019-04-18 21:26 GMT   |   Update On 2019-04-18 21:26 GMT
டெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JetAirwaysEmployees #Strike
புதுடெல்லி:

கடன்சுமை காரணமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து நிறுவன அதிகாரி அசோக் குப்புசாமி கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். சில காரணங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத சூழல் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதை சமாளிக்க வங்கிகளிடம் கடன் தொகை கோரப்பட்டது. ஆனால் கடன் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கடன் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” என்றார்.  #JetAirwaysEmployees #Strike
Tags:    

Similar News