செய்திகள்

மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டி - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரகாஷ்ராஜ்

Published On 2019-04-13 08:32 IST   |   Update On 2019-04-13 08:32:00 IST
நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் பெங்களூருவில் தான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்பது குறித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். #LokSabhaElections2019 #PrakashRaj
பெங்களூரு:

மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அங்கன்வாடி மையங்கள் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களாக மாற்றப்படும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு பள்ளிகளை மூடுவதை தடுப்போம். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்போம். உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை தீவைத்து எரிக்க தடை விதிக்கப்படும். ஏரிகள் பாதுகாக்கப்படும், ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PrakashRaj


Tags:    

Similar News