செய்திகள்
நடிகை ஹேமமாலினி விதிமுறை மீறல்- விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அரசு பள்ளியில் பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #HemaMalini #EC
ஆக்ரா:
பாலிவுட் நடிகை ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
2014 தேர்தலில் அவர் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஷ்டீரிய லோக் தளம் கட்சி வேட்பாளர் ஜெய்ந்த்சவுத்ரியை தோற்கடித்தார்.
மதுரா தொகுதியில் மற்ற கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஹேமமாலினி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் சவுமுகன் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் பொதுக் கூட்டத்தில் பேசினார். அரசு பள்ளியில் பொதுக் கூட்டம் நடத்துவது தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மதுரா மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி ராம்மிஸ்ரா தெரிவித்துள்ளார். #HemaMalini #EC