செய்திகள்

குழந்தைகளின் ஆபாச படம் வைத்திருந்ததாக புகார் - ஏர் இந்தியா விமானி மீது நடவடிக்கை

Published On 2019-03-10 21:46 GMT   |   Update On 2019-03-10 21:46 GMT
ஏர் இந்தியா விமானி குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து எப்.பி.ஐ. அதிகாரிகள் விமானி மீது நடவடிக்கை எடுத்தனர். #AirIndiaPilot
புதுடெல்லி:

அமெரிக்க நாட்டின் சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆபாச படம், வீடியோ, ஓவியம் உள்ளிட்டவற்றை வைத்திருப்பது சட்ட விரோதம் ஆகும். அந்த குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது அங்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தநிலையில், அங்கு ஏர் இந்தியா விமானி ஒருவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவரை மத்திய புலனாய்வு படையினர் (எப்.பி.ஐ.) தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தனர். அவர் கடந்த 4-ந் தேதி டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிச் சென்றார். அந்த விமானம் அங்கு தரையிறங்கியபோது, விமானியை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைவிலங்கிட்டு பிடித்துச் சென்றனர். அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றினர். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதை பெயர் குறிப்பிட விரும்பாத ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.  #AirIndiaPilot 
Tags:    

Similar News