செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் - வேதாந்தா குழுமம்

Published On 2019-02-19 13:34 GMT   |   Update On 2019-02-19 13:34 GMT
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.



இதேபோல், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
Tags:    

Similar News