செய்திகள்

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு - உடல்நலக்குறைவால் சக்சேனாவுக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன்

Published On 2019-02-14 19:08 GMT   |   Update On 2019-02-14 19:08 GMT
ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சக்சேனா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. #AgustaWestlandCase #RajivSaxena
புதுடெல்லி:

முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடாக ரூ.3,600 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக துபாய் வர்த்தக பிரமுகர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் அவருக்கு இருதய கோளாறும், ரத்த புற்றுநோயும் இருப்பது தெரிந்தது. சிகிச்சை பெறுவதற்காக ராஜீவ் சக்சேனா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை அமலாக்கத்துறையும் ஆதரித்தது. எனவே அவருக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது உடல்நிலை பற்றிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு உத்தரவிட்டு, வழக்கை 22-ந்தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது. #AgustaWestlandCase #RajivSaxena

 
Tags:    

Similar News