செய்திகள்

சி.பி.ஐ. இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பு ஏற்பு

Published On 2019-02-04 23:39 GMT   |   Update On 2019-02-04 23:39 GMT
ஐ.பி.எஸ். அதிகாரி ரிஷிகுமார் சுக்லா, சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். #RishiKumarShukla #CBIDirector
புதுடெல்லி:

ஐ.பி.எஸ். அதிகாரி ரிஷிகுமார் சுக்லா, சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். 1983-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான ரிஷிகுமார் சுக்லா மத்திய பிரதேசத்தில் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர். உளவுப்பிரிவில் சிறந்த அனுபவம் வாய்ந்த இவர் சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து ரிஷிகுமார் சுக்லா நேற்று இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டெல்லி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதிய இயக்குனருக்கு, இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல அதிகாரிகளும், ஊழியர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரிஷிகுமார் சுக்லா, 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தில் மாநில போலீசாருக் கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை யில் சி.பி.ஐ.யின் இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. #RishiKumarShukla #CBIDirector 
Tags:    

Similar News