செய்திகள்

6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட ரூ.40 ஆயிரம் கோடி - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

Published On 2019-01-31 15:13 GMT   |   Update On 2019-01-31 15:13 GMT
இந்திய கடற்படைக்காக தேவைப்படும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பாதுகாப்புத்துறை கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry
புதுடெல்லி:

பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக தேவைப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. #DefenceMinistry
Tags:    

Similar News