செய்திகள்

பெங்களூரில் மனைவியை வரதட்சணை கொடுமை செய்த தனியார் ஏர்லைன்ஸ் பைலட் கைது

Published On 2019-01-17 11:01 GMT   |   Update On 2019-01-17 11:01 GMT
பெங்களூரில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமை செய்த தனியார் ஏர்லைன்ஸ் பைலட்டை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:

இண்டிகோ ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றி வருபவர் யுதிஷ்டர் புனியா (வயது 32). இவருக்கும் பினு சிங் என்பவருக்கும் 2014-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருந்த இந்த தம்பதியர் பின்னர் 2016-ம் ஆண்டில் பெங்களூரு வந்தனர். அங்கு, மாரத்தள்ளி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தனர். திருமண நேரத்தில், யுதிஷ்டருக்கு ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் வரதட்சணையாக தாரளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தம்பதியர் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், யுதிஷ்டருக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவர் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ய தொடங்கினாராம். பிறந்த வீட்டிலிருந்து மேலும் பணம், நகைகளை கொண்டு வரச்சொல்லி மனைவியை கட்டாயப்படுத்தியும், சித்ரவதை செய்தும் வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு யுதிஷ்டரின் தாயாரும் உடந்தையாக இருந்தாராம். இதனால் மன உளைச்சல் அடைந்த பினுசிங் தனது கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூரு எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பித்து வந்த யுதிஷ்டரை, நீதிமன்ற உத்தரவின்படி எச்.ஏ.எல். போலீசார், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
Tags:    

Similar News