செய்திகள்

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

Published On 2018-11-18 13:54 GMT   |   Update On 2018-11-18 14:05 GMT
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளின் அனல் பிரச்சாரத்துடன் இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைந்தது. #ChattsgarhAssemblyElections #SecondPhaseCampaign
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார். 

இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதி மற்றும் 20-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.  டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 72 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

கடைசி நாளான இன்று பாஜக சார்பில் பிரதமர் மோடி, முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் மற்றும் அஜித் ஜோகி கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தகவல் வெளியானது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign
Tags:    

Similar News