செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-08 14:01 IST   |   Update On 2018-11-08 14:01:00 IST
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. #CitizenshipBill #AssamProtest #AASU
கவுகாத்தி:

மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 46 அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் 23-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்நிலையில் அசாம் மாணவர் அமைப்பான ஏஏஎஸ்யு மற்றும் 28 அமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. கவுகாத்தியின் கணேஷ்குரியில் இருந்து திஸ்பூர் வரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #CitizenshipBill #AssamProtest #AASU
Tags:    

Similar News