செய்திகள்

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பா.ஜ.க.வில் இணைந்தார்

Published On 2018-10-28 13:17 IST   |   Update On 2018-10-28 13:17:00 IST
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மாதவன் நாயர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். #BJP #Amitshah #MadhavanNair
திருவனந்தபுரம்:

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராகவும் மத்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் பதவி வகித்தவர், மாதவன் நாயர்(75). இவரது அரசுப்பணிச் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.



இந்நிலையில், கேரளாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை நேற்று சந்தித்த மாதவன் நாயர், பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். #BJP #Amitshah #MadhavanNair

Tags:    

Similar News