செய்திகள்

டெல்லியில் துப்பாக்கிமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2018-10-15 23:08 GMT   |   Update On 2018-10-15 23:08 GMT
டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் துப்பாக்கியை காட்டி ரூ. 2.7 லட்சம் வழிப்பறி செய்த 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். #DelhiRobbery
புதுடெல்லி :

தலைநகர் டெல்லியில் ஜகத்புரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பன்சால் என்பவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.2.7 லட்சம் பணத்தை துப்பாக்கியை காட்டி இருவர் கொள்ளையடித்தனர். பணத்தை இழந்த பன்சால் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.

இருப்பினும் துப்புதுலங்காததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பன்சாலிடம் பகுதி நேர ஓட்டுனராக பணியாற்றிய இண்டால்(29) என்பவரின் உதவியுடன் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதை போலீசார் கண்டறிந்தனர். இண்டாலை கைது விசாரித்த போது பன்சால் பணம் எடுத்துச்செல்வதை அவரது  நண்பரக்ள் ரவிந்தர்(28) மற்றும் கசனா(29) என்பவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏற்கெனவே தீட்டிய திட்டத்தின் படி அவர் செல்லும் வழியில் வழிமறித்து பணத்தை ரவிந்தர் மற்றும் கசனா துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்துள்ளனர். அப்போது மிரட்டுவதற்காக வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இறுதியில் இண்டால், ரவிந்தர் மற்றும் கசனா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைநகரில் துப்பாக்கியை காட்டி பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DelhiRobbery
Tags:    

Similar News