செய்திகள்

ரபேல் ஒரு ‘கேம் சேஞ்சர்’, 36 விமானங்களை வாங்க அரசு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது - விமானப்படை தளபதி

Published On 2018-10-03 09:03 GMT   |   Update On 2018-10-03 09:03 GMT
ரபேல் போர் விமாங்கள் கேம் சேஞ்சராக திகழும், ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa
புதுடெல்லி :

பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை, ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வார்த்தைப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் ஒரு கேம் சேஞ்சர் என இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பிரான்சிடம் வாங்கும் ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷியாவிடம் இருந்து வாங்கவுள்ள எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இவை இரண்டும் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரித்து கேம் சேஞ்சராக திகழும்.

36 ரபேல் விமானங்களை வாங்க அரசு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுகோய் 30 விமானத்தை தர 3 ஆண்டும், ஜாகுவார் விமானத்தை தர 5 ஆண்டும் தாமதம் செய்தது. எனவே அதற்கு பதிலாக ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa 
Tags:    

Similar News