செய்திகள்

புனேயில் ஓரின சேர்க்கையின் போது தகராறு - வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது

Published On 2018-09-21 02:41 IST   |   Update On 2018-09-21 02:51:00 IST
புனே நகரில் ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை கத்தியால் குத்திய நபரை மகாராஷ்டிரா மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த 23 வயது மதிக்கத்தக்க வாலிபரை 46 வயது மதிக்கத்தக்க நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த அம்மாநில போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து புனே கதக் நகர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ காயம் பட்ட வாலிபருக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் கடந்து இரண்டு வருடங்களாக ஓரின சேர்க்கை உறவு இருந்துள்ளது. இந்நிலையில், புனேவில் உள்ள வாலிபரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் அந்த நபர் வந்துள்ளார். பின்னர் அவர்கள் அன்று இரவு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, மறுநாள் காலையிலும் அந்த நபர் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு உடன்படாமல் வாலிபர் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது.

இதில், ஆத்திரமடைந்த நபர் அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த வாலிபர் உதவி கேட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர் என அவர் தெரிவித்தார்.

ஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறு கத்திக்குத்து வரை சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய அவர்கள் இருவரது பெயரையும் போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News