செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

Published On 2018-09-19 20:28 GMT   |   Update On 2018-09-19 20:28 GMT
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #PetrolDiesel #PetrolPriceHike
புதுடெல்லி:

டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.



இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை எந்த அடிப்படையில் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுமாறும், அவற்றை அத்தியாவசிய பொருட்களாக கருதி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பூஜா மகாஜன் மற்றொரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News