செய்திகள்

மானபங்க வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண்ணின் தந்தை அடித்துக்கொலை

Published On 2018-09-18 10:03 GMT   |   Update On 2018-09-18 10:03 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் மானபங்க வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் பெண்ணின் தந்தையை ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #MolestationCase #MHMurder
நாசிக்:

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் கோல்டன் நகர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பெண்ணை சயீத் என்பவர் மானபங்கம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பவார்டி காவல் நிலையத்தில் சயித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு உள்ளூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மானபங்க வழக்கை திரும்ப பெறும்படி பெண்ணின் தந்தை பசல் முகமது நவாப் அலியிடம் (வயது 55) தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெற மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சயீத் மற்றும் சிலர் அலியை வழிமறித்து உருட்டுக்கட்டைகளால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அலி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பவார்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சயீத் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்துள்ளனர். 3 பேரை தேடி வருகின்றனர். #MolestationCase #MHMurder
Tags:    

Similar News