செய்திகள்

இறந்த கணவரின் உயிரணு மூலம் இரட்டை குழந்தை பெற்ற இளம்பெண்

Published On 2018-09-14 09:17 GMT   |   Update On 2018-09-14 09:17 GMT
கேரளாவில் கார் விபத்தில் பலியான கணவரின் உயிரணு மூலம் இளம்பெண் இரட்டை குழந்தைகளை பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன், கல்லூரி பேராசிரியர்.

சுதாகரனின் மனைவி ஷில்னா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பின்பும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக கணவனும், மனைவியும் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கடந்த ஆண்டு கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் குழந்தை பேறுக்கான சிகிச்சை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சுதாகரன், கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிலம்பூர் சென்றார். காரில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சுதாகரன், பரிதாபமாக இறந்து போனார்.

உடனடியாக அவரது உடல் கண்ணூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் அவரது மனைவி ஷில்னாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற ஷில்னா, காதல் கணவரின் ஆசைப்படி அவரது உயிரணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார். இதற்காக இறந்த கணவரின் உடலில் இருந்து உயிரணுவை எடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்யும்படி டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஷில்னா கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெறுவதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து டாக்டர்கள், ஷில்னாவின் கணவர் உயிரணுவை எடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் ஷில்னா குழந்தை பெற ஏற்பாடு செய்தனர்.

ஷில்னாவின் கணவர் இறந்து ஓராண்டு நிறைவு பெறும் நாளில் ஷில்னாவுக்கு பிரசவம் நடந்தது. அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதுபற்றி ஷில்னா கூறும்போது, இறந்துபோன என் கணவர் இப்போது இரட்டை குழந்தைகளாக பிறந்துள்ளார் என்று கூறி மகிழ்ந்தார். 

Tags:    

Similar News