செய்திகள்

மலையாள எழுத்தாளரின் ‘மீஷா’ புத்தகத்தை தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2018-09-05 13:07 GMT   |   Update On 2018-09-05 13:07 GMT
மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய ‘மீஷா’ புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #Meesha
புதுடெல்லி:

மலையாள எழுத்தாளரான ஹரீஸ், மாத்ரூபூமி இதழில் ‘மீஷா’ என்ற தொடரை எழுதி வந்தார். சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டது. பின்னர், இந்த தொடர் புத்தகமாக வெளிவந்தது. இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

புத்தகத்தில் கோயில் பூசாரிகள் மற்றும் இந்துப் பெண்களின் நிலை குறித்து மோசமாக சித்தகரித்து இருப்பதால் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த காலத்தில் இது போன்ற விசயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது அதே போல் இலக்கியப் படைப்புகளை தடை செய்யவும் இயலாது என்று கூறி உத்தரவிட்டனர்.

இதுவரை ராசவித்யாயுடே சரித்ரம், ஆதாம், அப்பன் என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள ஹரீஸ், ஆதாம் புத்தகத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News