செய்திகள்

உள்நாட்டில் நினைத்த நகரத்துக்கு செல்ல விமான டிக்கெட் ரூ.999 - ஏர் இன்டிகோ அதிரடி சலுகை

Published On 2018-09-03 15:06 IST   |   Update On 2018-09-03 15:07:00 IST
நாட்டிலுள்ள 59 வழித்தடங்களுக்கு 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் வகையில் 10 லட்சம் சலுகை விலை டிக்கெட் விற்பனையை இன்று முதல் 4 நாட்களுக்கு ஏர் இண்டிகோ அறிவித்துள்ளது. #IndiGo #IndiGoFestiveSale
புதுடெல்லி:

நடுத்தர மக்களுக்காக குறைந்த  செலவில் விமானப் பயணம் என்னும் முழக்கத்துடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையில் கால்பதித்த ஏர் இன்டிகோ நிறுவனம் 59 நகரங்களுக்கு விமானச்சேவை நடத்தி வருகிறது.

இந்நிலையில், விழாக்கால சலுகையாக தங்களது சேவையால் இணைக்கப்பட்டுள்ள  59 வழித்தடங்களுக்கும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் வகையில் 10 லட்சம் டிக்கெட்களை இன்றிலிருந்து (3-ம் தேதி) வரும் 6-ம் தேதிவரை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.



முன்பதிவு முறையின் மூலம் இந்த 4 நாட்களுக்குள் டிக்கெட்களை வாங்குபவர்கள் வரும் 18-ம் தேதியில் இருந்து 30-3-2019 வரை தாங்கள் நினைத்த நாளில் நினைத்த நகரத்துக்கு (டிக்கெட் கட்டணம் ஒருவழி பயணத்துக்கானது மட்டும்) செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘மொபிவிக்’ (MobiKwik) ஆப் மூலம் முன்பதிவு செய்பவர்கள் இந்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் வரை தள்ளுபடியும் பெறலாம். ஆனால், இந்த தள்ளுபடியை ஏர் இன்டிகோவின் இச்சலுகை காலத்தில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiGo  #IndiGoFestiveSale

Tags:    

Similar News