செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் பொறுப்பேற்றார்

Published On 2018-09-01 15:41 IST   |   Update On 2018-09-01 15:41:00 IST
அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அகமது பட்டேல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார். #AhmedPatel #Congresstreasurer
புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி அக்கட்சியின் அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். காரிய கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் புதிய நியமனங்களையும் அவர் செய்துள்ளார்.

அவ்வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொருளாளராக அகமது பட்டேல் நியமனம் செய்யப்பட்டார். முன்னர் இந்த பொறுப்பில் இருந்த மோத்திலால் வோரா, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிர்வாக பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார்.



இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளராக இன்று பொறுப்பேற்று கொண்ட அகமது பட்டேல் தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். #AhmedPatel #Congresstreasurer

Tags:    

Similar News