செய்திகள்

இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற டுடீ சந்துக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார் ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்

Published On 2018-08-31 17:45 GMT   |   Update On 2018-08-31 17:45 GMT
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் இன்று வழங்கினார். #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik


புவனேஸ்வர்:

 
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்தார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய டுடீ சந்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரூ.3 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார் #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
Tags:    

Similar News