செய்திகள்

உத்தரபிரதேசத்தில் குடிபோதையில் லாரியை ஏற்றி 5 பேரை கொன்ற டிரைவர்

Published On 2018-08-31 05:06 GMT   |   Update On 2018-08-31 05:06 GMT
உத்தரபிரதேசத்தில் குடிபோதையில் இருந்த லாரி டிரைவர் 5 பேரை ஏற்றி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் பார்டாபூர் பகுதியில் உள்ள மொகாம்பூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று மீரட் நகருக்கு இரவில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நூர்ஆலம் ஓட்டி வந்தார்.

மீரட் நகருக்கு முன்பு 7 கி.மீட்டர் துரத்தில் வரும் போது அந்த லாரி தாறு மாறாக ஓடியது. ஒரு சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் மீதும் மோதியது. பின்னர் மீரட் நகருக்குள் நுழைந்ததும் ஒரு வேன் மீதும், இரு சக்கர வாகனம் மீதும் மோதி இடித்து தள்ளியது.

அதில் இரு சக்கர வாகனத்தை ஒட்டியவரும், அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தவரும் பலியாகினர். அதை தொடர்ந்தும் வேகமாக சென்ற லாரி டிரக் மீதும், சைக்கிள் ரிக்ஷா மீதும் மோதியது. அதில் டிரக் டிரைவரும், சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்த 2 பேரும் உயிரிழந்தனர்.

அதன் பிறகும் நிற்காமல் சென்ற லாரி ரோட்டின் ஓரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் புகுந்து நின்றது. அதில் அங்கு தூங்கி கொண்டிருந்த 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற மீரட் போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர் நூர்ஆலமை கைது செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. # tamilnews
Tags:    

Similar News