செய்திகள்

ஐ.நா. முன்னாள் செயலாளர் கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-08-18 12:49 GMT   |   Update On 2018-08-18 12:49 GMT
ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #PMcondoles #KofiAnnan #RIPKofiAnnan
புதுடெல்லி:

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், கோபி அன்னான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


‘ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான கோபி அன்னான் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரும் தலைவராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும், உலகநாடுகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க எண்ணியவருமான அவரை உலகம்  இழந்து விட்டது.

இந்த நூற்றாண்டின் இலக்குகளை எட்ட அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கதாகும். இந்த சோகமயமான வேளையில் அவரை இழந்து துயரப்படும் அபிமானிகள் மற்றும் குடும்பத்தாருடன் எனது நினைவுகள் இணைந்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தனது இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMcondoles #KofiAnnan #RIPKofiAnnan
Tags:    

Similar News