செய்திகள்

மணற்சிற்பம் உருவாக்கி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

Published On 2018-08-17 06:47 GMT   |   Update On 2018-08-17 06:47 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SudarsanPattnaik
பெங்களூர்:

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். அவரது உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.



வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெங்களூர் மராத்தாஹள்ளியில் உள்ள வக்தேவி விலாஸ் கல்வி நிறுவன வளாகத்தில் வாஜ்பாயின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார்.  அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee  #SudarsanPattnaik #SudarsanSand
Tags:    

Similar News