செய்திகள்

ஒன்றிணைந்த இந்தியாவிற்கு ஜின்னா பிரதமர் ஆகியிருக்கலாம் - தலாய்லாமா சர்ச்சை கருத்து

Published On 2018-08-08 15:45 GMT   |   Update On 2018-08-08 15:45 GMT
சுதந்திரத்திற்கு பிறகு பிரிவினை ஏற்படாமல் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு முகமது அலி ஜின்னா பிரதமராக இருந்திருக்கலாம் என தலாய்லாமா சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். #DalaiLama
பனாஜி :

திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தான் தேச தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆகியிருக்கலாம் என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம், பனாஜியில் அமைந்துள்ள கோவா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிக்ழ்சி ஒன்றில் பங்கேற்று தலாய்லாமா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே சுதந்திறத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆக வேண்டும் என்பதை மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால், காந்தியின் விருப்பத்தை நேரு விரும்பவில்லை. நேருவிற்கு இருந்த சிறிது சுயநலமே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

ஒருவேலை காந்தி கூறியது போல் நடந்திருந்தால், பாகிஸ்தான் நாடு உருவாகாமல் ஒன்றினைந்த இந்தியாவாக தேசம் இருந்திருக்கும். நேருவைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர், மிகவும் அனுபவம் வாய்ந்த நபர், சிறந்த அறிவாளி ஆனால் சில சமயங்களில் தவறு கூட நடந்துவிடுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #DalaiLama
Tags:    

Similar News