செய்திகள்

மோசமான வானிலையினால் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கி தவிப்பு

Published On 2018-08-06 01:14 IST   |   Update On 2018-08-06 01:14:00 IST
நேபாளத்தில் உள்ள சிமிகோட் பகுதியில் மோசமான வானிலை காரணமாக கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 200 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். #MansarovarYatra
காத்மாண்டு :

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற பக்தர்கள் 200 பேர் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் உள்ள சிமிகோட் பகுதியில் சிக்கி தவிக்கிறார்கள்.

அவர்களுடன் நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினருடமும் தொடர்பில் உள்ளனர்.  சிமிகோட் பகுதியில் 500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. 

யாத்ரிகர்களுக்கு  ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வசதிகளும் அங்கு உள்ளது.  எனவே, சிக்கியுள்ள 200 பேர் பற்றி அச்சப்பட தேவையில்லை எனவும் அவர்கள் அனைவரையும் வானிலை சீரடைந்த பின்னர் விமானங்களை அனுப்பி பாதுகாப்புடன் மீட்டு வருவோம் எனவும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MansarovarYatra
Tags:    

Similar News