செய்திகள்
யோகனன் சைமன்

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரள தொழில் அதிபருக்கு ரூ.18.68 கோடி பரிசு

Published On 2018-08-04 15:03 IST   |   Update On 2018-08-04 15:03:00 IST
வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. இதில் கேரள தொழில் அதிபருக்கு ரூ.18.68 கோடி பரிசு கிடைத்துள்ளது. #KeralaLottery
திருவனந்தபுரம்:

வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது.

கேரள தொழில் அதிபருக்கு ரூ.18.68 கோடி பரிசு

கேரள மாநிலம் வள்ளப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் யோகனன் சைமன் என்பவருக்கு சமீபத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் 10 மில்லியன் திர்காம் பரிசு விழுந்தது. இது இந்திய பணத்திற்கு ரூ.18.68 கோடியாகும்.

யோகனன் சைமன் வளைகுடா நாட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். பரிசு விழுந்தது பற்றி கூறும்போது, இதற்கு முன்பு பல முறை நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்கி உள்ளேன்.

முதல் முறையாக இப்போதுதான் தனியாக லாட்டரி வாங்கினேன். அதற்கு ரூ.18.68 கோடி பரிசு விழுந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

வளைகுடா நாட்டில் நடைபெறும் ஆன்லைன் லாட்டரியில் தொடர்ந்து கேரள வாலிபர்களுக்கே அதிர்ஷ்டம் அடிக்கிறது. கடந்த மாதம் சந்தீப்மேனன் என்பவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜாண் வர்கீஸ் என்ற டிரைவருக்கு 12 மில்லியன் திர்காம் பரிசு கிடைத்தது. ஜனவரி மாதம் இன்னொரு கேரள வாலிபருக்கு இதுபோல 12 மில்லியன் திர்காம் பரிசு விழுந்தது. இப்போது யோகனன்சைமன் ரூ.18.68 கோடி பரிசு வென்றுள்ளார். #KeralaLottery
Tags:    

Similar News