செய்திகள்

மேற்கு வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேறியது

Published On 2018-07-27 07:11 GMT   |   Update On 2018-07-27 07:11 GMT
மேற்கு வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. #LokayuktaBill #WestBengalAssembly

கொல்கத்தா:

அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்க உதவும் லோக் ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லோக் ஆயுக்தா சட்டம் சில மாநிலங்களில் உள்ளன. ஆனால் 12 மாநிலங்களில் அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்தது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய கோர்ட்டு, லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. சமீபத்தில் தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் மேற்கு வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கான மசோதாவை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News