செய்திகள்

அல்வார் தாக்குதலில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கியது அரியானா அரசு

Published On 2018-07-26 10:52 GMT   |   Update On 2018-07-26 10:52 GMT
அல்வார் கும்பல் தாக்குதலில் பலியான ரக்பர் கானின் குடும்பத்தினருக்கு அரியானா மாநில அரசு 8 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. #AlwarLynchingCase #HaryanaGovt
சண்டிகர்:

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் கடந்த வாரம் ரக்பர்கான் என்பவர் கும்பலால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்களும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், ரக்பர் கானின் மரணத்தில் போலீசாரின் அலட்சியமும் மிக முக்கியமான காரணம் என செய்திகள் வெளியாகின. மாடுகளை காப்பதிலேயே போலீசார் கவனம் செலுத்தியதாகவும், அடிபட்டு உயிருக்கு போராடி வரும் ரக்பர் கானை சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகுதான் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



இதையடுத்து, உயிரிழந்த ரக்பர் கானின் குடும்பத்தினருக்கு அரியானா மாநில அரசு 8 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை ரக்பர் கானின் குடும்பத்தினரிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. வழங்கினார். மீதமுள்ள 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை துணைக் கோட்ட அதிகாரி வழங்கினார். #AlwarLynchingCase #HaryanaGovt
Tags:    

Similar News