செய்திகள்

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்டு மாதம் நடக்கிறது

Published On 2018-07-18 22:54 GMT   |   Update On 2018-07-18 22:54 GMT
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விவாதிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:

பாரதீய ஜனதா கட்சி ஆளும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டின் (2018) இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது

இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்து விவாதிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

அக்கட்சியின் கொள்கைப்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கட்சித்தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் 3 மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழு கூட்டம் நடத்தப்படவில்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News