செய்திகள்
லீமாமகேந்திர நாராயணன்

நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற கேரள பெண் பலி

Published On 2018-07-03 09:43 GMT   |   Update On 2018-07-03 09:43 GMT
நேபாள நாட்டில் கைலாச புனித யாத்திரைக்கு சென்ற கேரள பெண் மூச்சு திணறி உயிரிழந்தார். #MansarovarYatra
திருவனந்தபுரம்:

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு சென்றனர். இவர்களில் மலப்புரம் மாவட்டம் வந்தூர் பகுதியைச் சேர்ந்த லீமாமகேந்திர நாராயணன்(வயது56) என்பவரும் ஒருவர். இவர் புனித தலங்களை பார்த்து விட்டு கேரளா திரும்ப திட்டமிட்டார். இந்நிலையில் நேபாளத்தின் சிமிகோட் என்ற இடத்தில் வைத்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் உயிர் இழந்து விட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிராண வாய்வு குறைபாடு காரணமாக லீமாமகேந்திர நாராயணன் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் சிமிகோட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவரது உடலை கேரளா கொண்டுச் செல்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். #MansarovarYatra #IndiansStrandedInNepal
Tags:    

Similar News