செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு பொறுப்பேற்பு

Published On 2018-07-02 18:49 IST   |   Update On 2018-07-02 18:49:00 IST
பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக அதன் முன்னாள் துணை மேலாண்மை இயக்குனர் அர்ஜித் பாசு இன்று பொறுப்பேற்றார். #SBI
புதுடெல்லி :

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக பதவி வகித்த ரஜ்னீஷ் குமார்,  தற்போது அவ்வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், காலியாக உள்ள மேலாண்மை இயக்குனர் பதவிக்கு அர்ஜித் பாசு தேர்வு செய்யப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்றுள்ளார். கமர்ஷியல் கிரெடிட் மற்றும் ஐ.டி ஆகியவை சார்ந்த துறைகளை அர்ஜித் பாசு கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கித்துறையில் 35 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் உடைய அர்ஜித், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவராவார்.  இதற்கு முன்னதாக,  பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண்மை இயக்குனராக அவர்  பதவி வகித்துள்ளார். மேலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக செப்டம்பர் மாதம் 2014 முதல் மார்ச் மாதம் 2018 வரை அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SBI
Tags:    

Similar News