செய்திகள்

ஒடிசா தேர்தலில் வெற்றி பெறுவோம்- அமித்ஷா நம்பிக்கை

Published On 2018-07-02 07:28 GMT   |   Update On 2018-07-02 07:28 GMT
2019 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என அமித்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #BJP #AmitShah
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.

147 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. பாராளுமன்றத் தேர்தலோடு அங்கு சட்ட சபை தேர்தலும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்துடன் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக பா.ஜனதா மேலிடம் அங்கு அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒருநாள் பயணமாக ஒடிசா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

2,400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து அளவிலான உறுப்பினர்களை அவர் சந்தித்து ஆலோசனை செய்தார். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா விரிவாக விவரித்தார்.

ஒடிசா மாநிலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

நவீன் பட்நாயக் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்துக்களை பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டது.

2019 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 120 இடங்களில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். #BJP #AmitShah
Tags:    

Similar News