செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்ய பறந்து செல்லும் ட்ரோன்கள்

Published On 2018-06-11 05:33 GMT   |   Update On 2018-06-11 05:33 GMT
ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முதலுதவி பெட்டியை விபத்து நடைபெற்ற கொண்டு செல்லும் வகையில் ட்ரோனை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். #designdrone #accidentspots
சென்னை:

சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் வகையில் புதிய ரக ட்ரோன்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

பொதுவாக ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு 13-15 நிமிடங்கள் ஆகும். சரியான முதலுதவி வழங்கப்பட்டால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவசர நேரத்தில் முதலுதவி வழங்க தெரியாமல் யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

இந்நிலையில், மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன்கள் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளை விபத்து நடந்த இடத்திற்கு கொண்டு செல்லும். மேலும், அதிலுள்ள திரை மூலம் முதலுதவு செய்யும் முறைகளை வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வீடியோவை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் பலரின் உயிரை காப்பாற்ற முடியும். இது 8 கிலோ எடை கொண்ட மருந்துகளை தூக்கி செல்லும். மற்றும் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ரிமோட் மூலம் இயக்கலாம் என மாணவர்கள் தெரிவித்தனர். #designdrone #accidentspots

Tags:    

Similar News