செய்திகள்

இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் - முக்தர் அப்பாஸ் நக்வி

Published On 2018-06-03 10:16 GMT   |   Update On 2018-06-03 10:16 GMT
இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்துள்ளார். #MukhtarAbbasNaqvi
பனாஜி :

கோவா மாநிலம், பானாஜியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்க்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் சமூகம், பொருளாதாரம், கல்வி மற்றும் மத உரிமைகளோடு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கு பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க ஒருசிலர் முயன்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

ஏனெனில், பா.ஜ.க அரசு ஒருபோதும் வாக்குகளுக்காக மட்டுமே, சிறுபான்மையினர் மேம்பாட்டு நல திட்டங்களை செயல்படுத்துவதில்லை. பாகுபாடு இல்லாமல், கண்ணியமான முறையில் நாங்கள் சிறுபான்மையினர் நல திட்டங்களை செய்துவருகிறோம்.

ஆனால், சிறுபான்மையினருக்கு நாட்டில் அச்சுறுத்தல் இருப்பது போன்று ஒரு சில அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்ற சிறு சிறு மத மோதல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் நாட்டில் பெரிதாக எந்த மத கலவரமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். #MukhtarAbbasNaqvi
Tags:    

Similar News