செய்திகள்

மேற்கு வங்காளத்திற்கென பிரத்யேக பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் மம்தா பானர்ஜி

Published On 2018-06-01 14:05 IST   |   Update On 2018-06-01 14:05:00 IST
மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனத்தை போன்று மாநிலத்துக்கு என பிரத்யேக பாதுகாப்பு ஆலோசகரை மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். #MamataBanerjee #statesecurityadviser
கொல்கத்தா:

மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பினை போன்று மேற்கு வங்க மாநிலத்தில் மாநில பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பினை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உருவாக்கியுள்ளார். இந்த பதவிக்கு என நேற்றுடன் ஓய்வு பெற்ற டிஜிபி சுரஜித் கர் புர்க்‌ஷயாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவருடன் தலைமைச்செயலக அதிகாரி நபன்னாவும், மாநில காவல் தலைமைகத்தில் இருந்து ஒரு அதிகாரி என 2 அதிகாரிகள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ராகுல் சின்கா, இந்த பதவி உருவாக்கப்பட்டதே புர்க்‌ஷயாவுக்காக தான் என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பஞ்சாயத்து தேர்தலின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத போலீஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் மம்தாவால் பிரதமர் ஆக முடியாது என்பதாலும், மத்திய பாதுகாப்பு பிரிவு இவருக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்பதாலும், மம்தா மாநில பாதுகாப்பு ஆலோசகரை நியமனம் செய்துள்ளாதாகவும் சின்கா கிண்டலாக தெரிவித்துள்ளார். #MamataBanerjee #statesecurityadviser
Tags:    

Similar News