செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்- 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடக்கம்

Published On 2018-05-31 22:06 GMT   |   Update On 2018-05-31 22:06 GMT
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. #Bankstrike

புதுடெல்லி:

சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 21 பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணபரிவர்த்தை முடங்கியது.

இந்நிலையில், 2 நாட்கள் நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்றதாகவும், இதன் காரணமாக சுமார் 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியதாகவும் வங்கிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்சனையை முழுமையாக சரிசெய்ய இன்னும் ஒரு வாரம் வரை எடுக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தினால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பண பரிவர்த்தனை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Bankstrike
Tags:    

Similar News