செய்திகள்

விவசாயிகள் கடனை கர்நாடக அரசு தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் - எடியூரப்பா

Published On 2018-05-25 14:28 GMT   |   Update On 2018-05-25 14:28 GMT
முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகள் கடனை 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் கர்நாடகாவில் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். #yeddyurappa #kumaraswamy
பெங்களூரு:

கர்நாடக மாநிலத் தேர்தலில் 77 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தபோது செய்த தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இன்று சட்டசபையில் இருந்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்த எடியூரப்பா, விவசாயிகள் கடனை குமாரசாமி தலைமையிலான அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என தெரிவித்தார். #yeddyurappa #kumaraswamy
Tags:    

Similar News