செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் - பாதுகாப்புப்படை வீரர் பலி

Published On 2018-05-24 11:53 IST   |   Update On 2018-05-24 11:53:00 IST
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Naxals
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் அதிக அளவில் உள்ளன. நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவர். மேலும், நக்சல்கள் தாக்குதல் நடத்த பல இடங்களில் குண்டுகளை மண்ணில் புதைத்து வைத்திருப்பர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் சுக்மா மாவட்டதின் புஸ்வாடா கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கான்ஸ்டபிள் மானிக் தின்பார் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர்களுக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நக்சல்களை பிடிக்க போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Naxals

Tags:    

Similar News