செய்திகள்

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் - தலைவர்கள் கருத்து

Published On 2018-05-19 17:40 IST   |   Update On 2018-05-19 17:40:00 IST
உச்ச நீதிமன்றத்தால் கர்நாடக அரசியலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். #KarnatakaElection #YeddyurappaResign
புதுடெல்லி:

கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியது. எடியூரப்பா தனது உணர்ச்சிமிகு உரையில், உயிர் உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன் என்றார்.

தனது பேச்சை முடித்ததும், எடியூரப்பா தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக எடியூரப்பா முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததால் ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சதி வீழ்த்தப்பட்டது. கர்நாடகாவிற்கு இது வெற்றி. பாஜக வீழப் போவதற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்றார்.



இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார்.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், ஜனநாயகம் வெற்றி பெற்றதற்கு கர்நாடக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

இதேபோல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. குமாரசாமிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection #YeddyurappaResign 
Tags:    

Similar News