செய்திகள்

போலி ஏடிஎம் கார்ட் மூலம் பணமோசடி - 2 பேர் கைது

Published On 2018-05-15 17:42 IST   |   Update On 2018-05-15 17:42:00 IST
தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணமோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 35 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். #fakeatmcards
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பண மோசடி செய்யப்பட்டதாக 45 க்கும் மேற்பட்ட புகார் எழுந்தது. இதையடுத்து அந்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சைதராபாத்தில் மோசடி கும்பல் பதுங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 ரோமானியர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 35 லட்சம் ரூபாய் ரொக்கம், 193 போலி ஏடிஎம் கார்டுகள், ஆறு கேமரா பேனல்கள், 7 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்ஸ், லேப்டாப் உட்பட பல எலக்ட்ரானிக் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.



மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக போலி ஏடிஎம் மோசடி அதிகமாகிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. #fakeatmcards
Tags:    

Similar News