செய்திகள்

உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை - தொடங்கி 26 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு

Published On 2018-05-05 05:59 GMT   |   Update On 2018-05-05 05:59 GMT
மும்பையில் தொடங்கப்பட்ட உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவையானது இன்றுடன் 26 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. #womensspecialtrain #mumbaitrain
மும்பை:

இந்தியாவின் மேற்கு ரெயில்வே பெண்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்கள் சிறப்பு ரெயில் சேவையை 1992-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி தொடங்கியது. இது உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் பணிக்கு பாதுகாப்பாக செல்ல முடிந்தது. இது ரெயில்வே துறையில் ஒரு மைல் கல்லாக விளங்கியது.

ஆரம்பக்கட்டத்தில் இரண்டு ரெயில் நிலையங்களுக்கு மட்டுமே ரெயில் சேவை அமைக்கப்பட்டது. பின்னர் மத்திய ரெயில்வே நான்கு ரெயில் நிலையங்களுக்கு விரிவுப்படுத்தியது. இதன் மூலம் மும்பையில் உள்ள பெண்கள் அதிக அளவில் பயனடைந்தனர். இந்த சேவை 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


26 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக சிறப்பு ரெயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் சேவை குறித்து கருத்துக்கள் கேட்கப்படும். அதன் அடிப்படையில் சேவையில் மாற்றங்கள் செய்யப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #womensspecialtrain #mumbaitrain

Tags:    

Similar News