செய்திகள்

விடுதியில் தங்கியிருந்த பெண் கற்பழிப்பு - மேலாளர் கைது

Published On 2018-05-03 13:39 IST   |   Update On 2018-05-03 13:39:00 IST
அரியானா மாநிலத்தின் பிரபல விடுதியில் தங்கியிருந்த பெண்ணை கற்பழித்த விடுதியின் மேலாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.#HaryanaOyoHotel
குர்கான்:

அரியானா மாநிலத்தில் ஓயோ எனப்படும் விடுதிகள் குறித்த விவரங்கள் அறியும் பிரபல ஆன்லைன் நிறுவனம் பங்குதாரராக இருக்கும் பிரபல விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த மாதம் கணவன், மனைவி தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கணவர் பணிக்குச் சென்றிருந்தபோது அந்த விடுதியின் மேலாளர் ராகவ், அந்த அறைக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு ஞாயிறன்றும் அறையை மாற்றுவது விடுதி வழக்கம் என்றும் அறையை மாற்றுமாறும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்போது தன் கணவர் பணி முடித்து வந்த பிறகு அறையை மாற்றிக் கொள்வதாக அந்த பெண் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து இரவு சுய நினைவை இழந்ததாகவும், அப்போது திடீரென அறைக்குள் வந்த ராகவ், தன்னை கற்பழித்ததாகவும் அந்த பெண் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விடுதி மேலாளர் ராகவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள ஓயோ நிறுவனம், விடுதி நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், மேலும் வழக்கு விசாரணையில் இருப்பதால் தற்காலிகமாக ராகவை பணி நீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. #HaryanaOyoHotel

Similar News