செய்திகள்

உ.பி: ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு - ஆஸ்பத்திரி வாசலில் குழந்தை பெற்ற பெண்

Published On 2018-01-30 14:29 IST   |   Update On 2018-01-30 14:29:00 IST
உத்தரபிரதேசத்தில் ஆதார் இல்லாததால் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் மறுத்து விட்டதையடுத்து மருத்துவமனை வாசலிலேயே ஒருமணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது.

ஜூவான்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் ஜூவான்பூர் மாவட்டம் ‌ஷகன்ஜ் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சாந்தா ஆரம்ப சுகாதார மையத்திற்கு பிரசவத்துக்காக சென்றார்.

அவரிடம் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு இல்லாததால் டாக்டர்கள் பிரசவம் பார்க்க மறுத்து விட்டனர்.

இதனால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் இருந்து அவரது கணவர் வெளியே அழைத்து வந்தார்.

அப்போது அவர் பிரசவ வலியால் துடித்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை வாசலிலேயே அவர் படுத்து கிடந்தார். ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அங்குள்ளவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சாந்தாவையும், குழந்தையையும் உடனடியாக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.  #tamilnews

Similar News