செய்திகள்

குறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்

Published On 2018-01-28 09:32 GMT   |   Update On 2018-01-28 09:32 GMT
குறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகள் குறித்து ஒரு தனியார் நிதி நிறுவனம் சார்பில் 112 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. #CheapestCountrytoLive #India

புதுடெல்லி:

குறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகள் குறித்து கோபேங்கிங்ரேட்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனத்தின் சார்பில் 122 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உள்ளூர் மக்களின் வாங்கும் திறன் குறியீட்டு, வாடகை குறியீடு, மளிகை குறியீட்டு மற்றும் நுகர்வோர் விலை குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் குறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப்பட்டியலில் ஆப்ரிக்க நாடான தென்னாப்ரிக்கா முதல் இடம் பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டில் அதிகபடியாக கிடைக்கும்  பிளாட்டினம், தங்கம், குரோமியம் போன்ற விலை உயர்ந்த தாதுக்களே ஆகும். அதைத்தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 



இந்தியாவில் சில நுகர்வோருக்கான பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. கொல்கத்தாவில் வாழும் ஒரு தனி நபரின் சராசரி மாதாந்திர செலவு ரூ. 18121 ஆகும். இந்தியாவில் அதிக அளவிலான ஜவுளி, வேதியியல் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி உள்ளூர் மக்களின் வாங்கும் திறன் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் உள்ளூர் மக்களின் வாங்கும் திறன் 20.9 சதவீதம் குறைவாகவும், வாடகை 95.2 சதவீதம் மலிவாகவும், மளிகை பொருட்களின் விலை 74.4 சதவீதம் குறைவாகவும், உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை 74.9 சதவீதம் மலிவாகவும் இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 14-வது இடத்திலும், நேபாளம் 28-வது இடத்திலும், வங்காளதேசம் 40-வது இடத்திலும் உள்ளன. இந்த கணக்கெடுப்ப்பில் மிக விலை உயர்ந்த நாடாக பெர்முடா உள்ளது. அதைத்தொடர்ந்து பஹாமாஸ் (111), ஹாங்காங் (110), சுவிட்சர்லாந்து (109), கானா (108) ஆகிய நாடுகள் உள்ளன. #CheapestCountrytoLive #India #GoBankingRates #tamilnews
Tags:    

Similar News