செய்திகள்

மியான்மர் அகதிகள் 36 ஆயிரம் பேர் இந்தியாவில் உள்ளனர்: எல்லை பாதுகாப்பு படை தகவல்

Published On 2017-11-29 19:57 GMT   |   Update On 2017-11-29 19:57 GMT
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது 36 ஆயிரம் ரோஹிங்கியாக்கள் இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் 10 லட்சம் பேர், அகதிகளாக வங்காளதேசத்துக்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் கே.கே.சர்மா கூறியதாவது:-

எங்களுக்கு கிடைத்த தகவல்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது 36 ஆயிரம் ரோஹிங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது.

அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவ வாய்ப்புள்ள இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். கடந்த சில மாதங்களில், 87 ரோஹிங்கியாக்களை பிடித்துள்ளோம். 76 பேரை திருப்பி அனுப்பினோம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல வேலை கிடைக்கும் என்று ஏமாற்றி அவர்களை ஏஜெண்டுகள் அழைத்து வருகிறார்கள். ஆனால், சட்டவிரோதமாக யாரையும் நுழையவிட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News